ஈஸ்டர் தாக்குதல் தாக்குதல் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளை எக்காரணம் கொண்டும் நிறுத்திவிடக் கூடாது என கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ அரசாங்கத்திடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.
பேராயர் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
இந்தத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முடக்குவதற்கும், சீர்குலைப்பதற்கும் பல தரப்பினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான பின்னணியில், எந்தவொரு காரணத்திற்காகவும் இந்த விசாரணைகள் பாதியில் நிறுத்தப்பட்டால், அது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் கடுமையான அநீதியாகும் என்றும் அருட்தந்தை சிறில் காமினி மேலும் தெரிவித்துள்ளார்.
