உலகச் செல்வங்களை விட ஈமானை உயர்வாகக் கருதிய இந்திய இளைஞரின் உறுதிப்பாடு!

Date:

-முஹம்மத் பகீஹூத்தீன்

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபரும் மருந்துத் துறையின் முக்கிய பிரமுகருமான தேவ் மாலிக்கின் மகன் ஆயுஷ் மாலிக், தாம் முழுமையான விருப்பத்துடன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக அறிவித்து, தனது பெயரை “முஹம்மது அலி” என மாற்றிக்கொண்டதாக சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

இந்த அறிவிப்பு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசியல் சூழலிலும், இந்துத்துவ தேசியவாத வட்டாரங்களிலும் குறிப்பிடத்தக்க கவனத்தை எடுத்துள்ளது.

ஆயுஷ் மாலிக், இஸ்லாத்தைத் தழுவியதாக அறிவித்ததைத் தொடர்ந்து, குடும்பத்தினருடனும், சில இந்துத்துவக் கடும்போக்கு அமைப்புகளுடனும் கருத்து முரண்பாடுகளை எதிர்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் பின்னணியில், அவரது தந்தை பரம்பரைச் சொத்துகளில் இருந்து எந்தப் பங்கும் வழங்கமாட்டேன் என்று அறுதியிட்டுக் கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த முஹம்மது அலி, தனது தந்தையையும் அதிகாரிகளையும் நோக்கி, “உங்கள் செல்வங்களையும் சொத்துகளையும் நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்.

சூரியனை என் வலது கையிலும் சந்திரனை என் இடது கையிலும் வைத்தாலும், நான் இஸ்லாத்தை விட்டுவிட்டு மீண்டும் இந்துமதத்திற்குத் திரும்பமாட்டேன்”

என்று கூறியதாகவும், அதன்மூலம் நபிகள் நாயகம்  அவர்கள் வெளிப்படுத்திய உறுதியான கொள்கை நிலைப்பாட்டை நினைவூட்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆயுஷின் இந்த முடிவு உலகளாவிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

பணம், செல்வாக்கு மற்றும் அரசியல் அதிகாரத்தின் கவர்ச்சிகளுக்கு மத்தியிலும் அவர் எடுத்திருக்கும் உறுதியான நிலைப்பாடு, மதச்சுதந்திரம், மனச்சாட்சி மற்றும் தனிநபர் நம்பிக்கையின் உரிமை தொடர்பான விவாதங்களுக்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவதானிகள் கருதுகின்றனர்.

அவர் வசிக்கும் மாநிலத்தில் சட்ட மற்றும் அரசியல் ரீதியாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளதாகவும், ஆளும் கட்சியுடன் நெருங்கிய தொடர்புடைய சில தரப்புகள் சட்டரீதியான அழுத்தங்களை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவதானிக்க முடிகிறது.

எனினும், தனது ஈமானிய நம்பிக்கைக்காக ஆடம்பர வாழ்க்கையையே துறக்கத் தயாராக இருப்பதாக அந்த இளைஞர் உறுதியாகத் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிகழ்வு உணர்த்தும் சில பாடங்கள்
1️⃣ நம்பிக்கையின் வலிமை
பணம், அதிகாரம் மற்றும் சமூக அழுத்தங்கள் மனிதனை அச்சுறுத்தக்கூடும். ஆனால், மனச்சாட்சியையும் உள்ளத்தில் ஆழப் பதிந்த நம்பிக்கையையும் அடிமைப்படுத்த முடியாது என்பதை இத்தகைய நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.
2️⃣ கொண்ட கொள்கையில் உறுதியாக நிலைத்திருத்தல்
தனது நம்பிக்கைக்காக குடும்ப உறவுகள், சமூக அந்தஸ்து, செல்வச் சுகங்கள் ஆகியவற்றையே தியாகம் செய்யத் தயாராக இருப்பது, வரலாற்றில் காணப்படும் மகத்தான ஈமானிய வரலாற்றை நினைவூட்டும் அரிய துணிச்சலாகும்.
3️⃣ நம்பிக்கை சுதந்திரம்

அரசியல் அல்லது சமூக அழுத்தங்களின் மூலம் மனிதர்களின் நம்பிக்கைகளை கட்டுப்படுத்தும் முயற்சிகள் பல சந்தர்ப்பங்களில் தோல்வியடைகின்றன. மாறாக, கொள்கைகளில் உறுதியாக நிற்பவர்கள் பிறருக்கு ஊக்கமளிக்கும் முன்னுதாரணங்களாக மாறுகின்றனர்.

உண்மையான கொள்கைகள் விற்கப்படவோ வாங்கப்படவோ முடியாது. உலகின் செல்வங்களையும் சுகங்களையும் விட, ஒரு மனிதன் தனது ஈமானையும் நம்பிக்கையையும் உயர்வாகக் கருதும்போது, அதுவே உண்மையான வெற்றியாகும்.

உலகை விலையாக கொடுத்து ஈமானை வாங்கிக்கொண்ட இந்த இளைஞரின் உள்ளத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் உறுதிப்படுத்தி, தீனுல் இஸ்லாத்தில் அவரை நிலைத்திருக்கச் செய்வானாக. ஆமீன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இன்று முதல் 26ஆம் திகதி வரை விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

தென்மேற்கு பருவமழை காரணமாக வேகமாக பரவி வரும் டெங்கு ஆபத்தைக் கட்டுப்படுத்துவதற்காக,...

பல பிரதேசங்களில் மழையுடனான வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

நாடு முழுவதும் டெங்கு பரவும் உயர் அபாய வலயங்கள் அறிவிப்பு!

நாடு முழுவதும் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கும், தடுப்பு நடவடிக்கைகளை...