2027ஆம் கல்வியாண்டில் பாடசாலைகளின் முதலாம் தரத்திற்கு (Grade 1) மாணவர்களை அனுமதிப்பதற்கான உத்தியோகபூர்வ சுற்றுநிருபத்தை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, மாணவர் சேர்க்கை செயல்முறைகள் தொடர்பான 25/2026 இலக்க சுற்றுநிருபத்தை கல்வி அமைச்சின் நிலைய உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கல்வி அமைச்சின் www.moe.gov.lk என்ற இணையத்தள முகவரிக்குச் சென்று இந்த சுற்றுநிருபத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.
முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான தகைமைகள், விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்யும் முறைகள் மற்றும் விதிமுறைகள் ஆகியவை இந்த புதிய சுற்றுநிருபத்தில் விரிவாக உள்ளடக்கப்பட்டுள்ளன.
