பொசொன் பெளர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 18,000-க்கும் மேற்பட்ட ‘தன்சால்கள்’ (தானசாலைகள்) பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இதுவரை 18,412 தன்சால்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் சங்கத்தின் செயலாளர் சாமில் முத்துக்குட குறிப்பிட்டார்.
நாளை (30) மற்றும் அதற்கு அடுத்த நாள் ( ஜூலை 01) செயல்படவுள்ள தான்சால்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.
பொசொன் பண்டிகை நடைபெறும் பகுதிகளில் அமைந்துள்ள கடைகள் மற்றும் தற்காலிக விற்பனை நிலையங்களும் பொசொன் வாரம் முழுவதும் கண்காணிக்கப்படும்.
உணவு மற்றும் பானங்களை வழங்கும் போது பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு தான்சால் ஏற்பாட்டாளர்களை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
