இன்று (03) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ (Litro) நிறுவனத்தின் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
12.5 கிலோகிராம் சிலிண்டர்5 கிலோகிராம் சிலிண்டர்2.3 கிலோகிராம் சிலிண்டர்
இதற்கமைய, சந்தையிலுள்ள மூன்று வகையான சிலிண்டர்களின் புதிய விலை விபரங்கள் பின்வருமாறு:
12.5 கிலோகிராம் சிலிண்டர்
-
குறைக்கப்பட்ட தொகை: 300 ரூபா
-
புதிய விலை: 4,465 ரூபா
5 கிலோகிராம் சிலிண்டர்
-
குறைக்கப்பட்ட தொகை: 118 ரூபா
-
புதிய விலை: 1,792 ரூபா
2.3 கிலோகிராம் சிலிண்டர்
-
குறைக்கப்பட்ட தொகை: 55 ரூபா
-
புதிய விலை: 835 ரூபா
உலக சந்தையில் நிலவும் எரிவாயு விலைத் திருத்தங்களுக்கு அமைவாக, உள்நாட்டு நுகர்வோருக்கு இந்த விலை குறைப்பின் பலனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
