இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.3 மில்லியனைக் கடந்துள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தகவல்களின்படி, ஜனவரி 1 முதல் ஜூலை 26 வரையிலான காலப்பகுதியில் மொத்தம் 1,313,974 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
ஜூலை மாதத்தின் முதல் 26 நாட்களில் மொத்தம் 167,401 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்தனர்.
ஜூலை மாதத்தில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடாக இந்தியா திகழ்ந்தது.
இக்காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து 38,785 பேர் வருகை தந்தனர். மேலும், இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த இந்திய சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 310,293 ஆக பதிவாகியுள்ளது.
