தேசிய நூலக சேவையின் தலைவர் இராஜினாமா!

Date:

மூத்த பாடலாசிரியர் ரத்ன ஸ்ரீ விஜேசிங்க, தேசிய நூலக மற்றும் ஆவணவாக்கல் சேவைகள் சபையின் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

பாடலாசிரியர் துறையில் நீண்ட காலப் பணி மற்றும் இலங்கை கலைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காகப் பரவலாக மதிக்கப்படும் விஜேசிங்க, தனிப்பட்ட காரணங்களுக்காகவே இப்பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்தார்.

இது தொடர்பில் குறிப்பிட்டுள்ள அவர், தனிப்பட்ட காரணங்களால் நான் பதவி விலக முடிவு செய்துள்ளேன். ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் மீதான எனது நம்பிக்கை மாறாமல் உள்ளது.

அவர்களுக்குத் தொடர்ந்து எனது ஆதரவை வழங்குவேன். எனது இந்த முடிவு முற்றிலும் தனிப்பட்டதாகும், குறிப்பாக எனது வயது தொடர்பானதே இதற்குக் காரணம். வேறு எந்தக் காரணமும் இல்லை.

அரசாங்கத்திற்கும் தனக்கும் இடையே எந்தவித முரண்பாடுகளும் இல்லை. தனது பதவி விலகல் ஆகஸ்ட் 11 முதல் நடைமுறைக்கு வரும்-என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

84 ஆயிரத்தை கடந்த டெங்கு பாதிப்பு எண்ணிக்கை; 61 பேர் உயிரிழப்பு!

ஜூலை 29 நள்ளிரவு நிலவரப்படி, இலங்கையில் இந்த ஆண்டு டெங்கு நோயால்...

விரைவில் 1990 சுவ செரிய மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவை!

1990 சுவ செரிய அறக்கட்டளை, மோட்டார் சைக்கிள் மூலமான அவசர மருத்துவ...

நாட்டில் கடற்பகுதிகளில் பலத்த காற்று

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான மற்றும் கற்பிட்டியிலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக...