கஞ்சிப்பானி இம்ரானின் சகாக்கள் இன்று நாட்டிற்கு

Date:

மலேசியாவில் கைதுசெய்யப்பட்ட பிரபல பாதாள குழு செயற்பாட்டாளர்களாக கருதப்படும் மூவர் இன்று நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளனர். உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒலுகலவின் தலைமையில் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கை ஊடாக மலேசியாவில் வைத்து அவர்கள் கைதாகினர்.

குறித்த சந்தேக நபர்கள், தேடப்படடு வரும் கஞ்சிப்பானி இம்ரானின் பிரதான சகாக்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் ஒருவரான இரத்மலானை சைமா என்பவருக்கு எதிராக சர்வதேச பொலிசாரினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் விசேட பாதுகாப்புடன் நாட்டிற்கு அழைத்து வரப்படும் இந்த 3 சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படுவார்கள் என பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கஞ்சிப்பான இம்ரானை கைதுசெய்யும் நோக்கில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட குழுவினர் மலேசியாவிற்கு சென்ற போதிலும் குறித்த நடவடிக்கையை கைவிட்டு இலங்கைக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது.

எனினும் மலேசிய பொலசாரும் இன்டர்போல் அமைப்பும்; கஞ்சிப்பானி இம்ரானை கைதுசெய்வதற்கான சோதனைகளை மலேசியாவில் தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

“திருக்குர்ஆனை மனனம் செய்வது மூளையின் செயலாக்கத் திறனை அதிகரிக்கும்”: நரம்பியல் பார்வையை விளக்கும் கண் மருத்துவ நிபுணர்!

திருக்குர்ஆனை மனனம் செய்வது வெறும் ஆன்மீக ரீதியான ஆசீர்வாதம் மட்டுமல்ல, அது...

கணினி அமைப்புக் கோளாறால் கடவுச்சீட்டு விநியோகம் தாமதம்!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு...

நீதிபதிகளின் ஓய்வு வயது விவகாரம்; சட்டத்தரணிகள் சங்கத்துடன் ஜனாதிபதி சந்திப்பு!

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கு அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவு...

ஆகஸ்ட் முதல் 6 நாட்களில் 42,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை!

ஆகஸ்ட் மாதத்தின் முதல் 6 நாட்களில் மட்டும் 42,810 வெளிநாட்டுச் சுற்றுலாப்...