குற்றச் செயல்களில் ஈடுபடும் முக்கிய குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘கஞ்சிபானி இம்ரான்’ என்பவரின் நெருங்கிய சகா என கருதப்படும் அவிஷ்க மதுஷான் அபேகுணவர்தன என்ற ‘வனாதே சத்து’ துபாயின் ரஃஸல் கைமாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
துபாய் பாதுகாப்புப் படையினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
