மக்காவை நோக்கி பாய்ந்த ட்ரோன் தாக்குதல்: சவூதியில் முதன்முறையாக வான்வழி எச்சரிக்கை!

Date:

முஸ்லிம்களின் புனித நகரான மக்கா மீது ஹூதிக்கள் ட்ரோன் மற்றும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அமெரிக்கா – ஈரான் இடையேயான போரில் ஈரானுக்கு ஆதரவாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். சவூதி அரேபியா, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவத் தளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சவூதி அரேபியாவில் உள்ள மக்கா, ஜெட்டா மற்றும் தைப் ஆகிய நகரங்கள் மீது ஹூதி படைகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சவூதி அரேபிய பாதுகாப்புப் படையினர் செய்திருந்தனர்.

இந்தச் சூழலில், மக்காவில் தெற்கே ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் ஹூதி படைகள் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்காரணமாக எச்சரிக்கை ஓசை எழுப்பப்பட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல சவூதி ராணுவம் அறிவுறுத்தியது.

எனினும், ஹூதிகள் ஏவிய ட்ரோன்களையும் ஏவுகணைகளையும் வான்வழித் தாக்குதல் எதிர்ப்பு ஏவுகணைகள் மூலம் நடு வானிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டதாக செளதி ராணுவம் அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சில மணிநேரங்களில் சவூதி ராணுவம் விடுத்திருந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.

மக்கா நகரின் மீதான தாக்குதலால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

2025/2026 ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியின் இறுதிச் செலுத்தலுக்கான காலக்கெடு...

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

சவூதி அரேபியாவின் மேற்குப் பகுதியில் மாறிவரும் பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு,...

தென் மற்றும் மேல் மாகாணங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!

இலங்கைக்கு அருகில் கீழ் வளிமண்டலத்தில் நிலவிய தளம்பல் நிலைமையானது தீவை விட்டு...

சலேவின் மருத்துவ அறிக்கை குறித்து நீதிமன்ற தீர்ப்பு

சுரேஷ் சலேவின் மருத்துவ அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்காதமை தொடர்பில் கொழும்பு தேசிய...