சுரேஷ் சலேவின் மருத்துவ அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்காதமை தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் எதிர்வரும் 22ம் திகதி மன்றில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேனவினால் இந்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டது.
குறித்த முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட பேர்து முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜராகிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் முன்வைத்த கோரிக்கையை கவனத்திற்கொண்டு இந்த உத்தரவு வழங்கப்பட்டது.
