கடற்படையில் யோஷித ராஜபக்ஷ பெற்ற சம்பள விபரம்: கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சாட்சியம்

Date:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, இலங்கை கடற்படையில் பணியாற்றிய காலத்தில் சம்பளமாக சுமார் 5,150,626 ரூபாயைப் பெற்றுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு இன்று (15) தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கில் சாட்சியமளித்த கடற்படை அதிகாரி ஒருவர் இந்தத் தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
குறிப்பிட்ட இந்தத் தொகையானது கடற்படையில் அவர் பணியாற்றிய போது வழங்கப்பட்ட அடிப்படைச் சம்பளப் பணத்தை மட்டுமே குறிப்பதாகவும், இதில் எவ்வித மேலதிக கொடுப்பனவுகளும் (Allowances) சேர்க்கப்படவில்லை என்றும் அந்த சாட்சி மன்றில் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கின் சாட்ச விசாரணை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்த விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஜனாதிபதி செயலகத்தை நோக்கி தேரர்களின் நடைபேரணி !

சிறை தண்டனை அனுபவித்து வரும் கலகொட அத்தே ஞானசார தேரரை பொதுமன்னிப்பின்...

உதவும் கரங்களின் உன்னதமான பணி; புத்தளம் சாஹிராவுக்கு பஸ் நன்கொடை!

புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையானது இப்பகுதியில் உள்ள முக்கியமான ஆண்கள் பாடசாலையாகும். இப்பாடசாலையில்...

நோர்வுட் அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் ஒப்புதல்!

நோர்வுட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நிதியை மோசடியாகப் பெற்றுக்கொண்டதாகத் தாமாக முன்வந்து...