சவூதி அரேபியாவின் ரியாத் மற்றும் தமாம் விமான நிலையங்களுக்கான சேவைகளை எதிர்வரும் 24ம் திகதி இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் தீர்மானித்துள்ளது.
ஏற்கனவே விமான சேவைகளை எதிர்வரும் 18ம் திகதி வரை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் அதனை 24 வரை நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பு நிலைமைகளை கவனத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஸ்ரீலங்கன் நிறுவனம் விசேட அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது. தமது பயணிகள் மற்றும் அலுவலக குழுவினரின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
வணிக விமான சேவைகளை நடத்துவதற்கு பொருத்தமான சூழல் நிலவுவதை உறுதி செய்ததன் பின்னர் விமான சேவைகளை மீள ஆரம்பிக்கவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களை இலங்கைக்குள் இருக்கும் பயணிகள் 1979 இலக்கத்தின் ஊடாகவும் வெளிநாடுகளிலிருந்து பயணிகள் +94 11 777 1979 என்ற இலக்கத்திற்கு அழைத்து பெற முடியும்.
அத்துடன் +94 74 444 1979 என்ற வட்ஸ்அப் இலக்கத்தின் ஊடாகவும் தகவல்களை பெற முடியுமென ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
