நாட்டை அண்மித்துள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம் தாழமுக்கமாக விருத்தியடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் இன்றும் (22) நாளையும் (23) நாட்டை சூழவுள்ள கடற்பகுதியில் மழையுடனான வானிலை நிலவும்.
இது குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுக்கும் அறிவித்தல்களை அவதானத்தில் எடுக்குமாறு மீனவ மற்றும் கடற்படை சமூகத்தினருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணத்தின் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
