இராணுவ வைத்தியசாலையில் கொவிட் தடுப்பூசியை தமது கட்சி M.Pகள் பெற்றுக்கொள்ள போவதில்லை | தமிழ் தேசிய மக்கள் முன்னணி

Date:

இராணுவ வைத்தியசாலையில் கொவிட் தடுப்பூசியை தமது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொள்ள போவதில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவிக்கின்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் S.கஜேந்திரன் இது தொடர்பில் தெரிவிக்கையில்

இன அழிப்பை நடத்திய இராணுவத்தின் செயற்பாட்டை தாம் ஏற்றுக்கொள்ள போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் எண்ணம் தனக்கு உள்ள போதிலும், இராணுவத்திடமிருந்து அதனை பெற்றுக்கொள்வதற்கான எண்ணம் கிடையாது எனவும் S.கஜேந்திரன் தெரிவித்தார்.

இதேவேளை, இராணுவ வைத்தியசாலைக்கு சென்று கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஶ்ரீதரன் தெரிவிக்கின்றார்.

இராணுவ வைத்தியசாலைக்கு சென்று, தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பில் தனக்கு நம்பிக்கை கிடையாது எனவும் அவர் கூறினார்.

அரசாங்க வைத்தியசாலைகள் காணப்படுகின்ற சந்தர்ப்பத்தில், ஏன் இராணுவ வைத்தியசாலைகளில் இந்த தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்புகின்றார்.

கிளிநொச்சியில் தடுப்பூசி வழங்கப்படும் சந்தர்ப்பத்தில், மக்களோடு மக்களாக தானும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள தயார் என எஸ்.ஶ்ரீதரன் தெரிவித்தார்.

வவுனியா கோகுலன்

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...