அமெரிக்காவில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை இலங்கை நேரப்படி இன்று அதிகாலையில் ஐந்து லட்சத்தை தாண்டியுள்ளது. உலகில் கொவிட்-19 காரணமாக ஒரு நாட்டில் ஏற்பட்டுள்ள ஆகக் கூடுதலான மரண எண்ணிக்கை இதுவாகும். இன்று காலையில் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய அமெரிக்க ஜனாதிபதி, கொவிட் மரண எண்ணிக்கை குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்.
ஒரு தேசம் என்ற வகையில் எம்மால் தாங்க முடியாத ஒரு கொடுமையாகவே நான் இதைப் பார்க்கிறேன. எமது துயரங்களுக்கு எதிராக நாம் உணர்ச்சியற்றவர்களாக இருக்கும் நிலையை எதிர்த்து நாம் போராட வேண்டும் என்று அவர் கூறினார். அமெரிக்க ஜனாதிபதி உப ஜனாதிபதி மற்றும் அவர்களது குடும்பத்தவர்கள் வெள்ளை மாளிகை முன்றலில் கொவிட்டால் இறந்தவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தினர். அத்தோடு மெழுகுவர்த்திகளை ஏற்றியும் அவர்கள் அஞ்சலி செலுத்தினர். இரண்டு கோடி 81 லட்சம் அமெரிக்கர்கள் கொரோணா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.