மட்டக்களப்பு மாவட்ட செயலத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதான வேலைத்திட்டம்

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோய் தொற்று காரணமாக டெங்கு நுளம்புகள் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்குடன் இன்றைய தினம் (24) மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே. கருணாகரன் தலைமையில் மாவட்ட செலயகத்தின் உள்ளக வளாகம் மற்றும் வெளி வளாகங்களில் சிரமதான நிகழ்வு நடைபெற்றது.
 இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த், காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்ஜினி முகுந்தன், பிரதம கணக்காளர் கே. ஜெகதீஸ்வரன், உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலாபுண்ணியமூர்த்தி, பிரதம உள்ளக கணக்காய்வாளர் இந்திராமோகன், மாவட்ட பொறியியலாளர் ரீ. சுமன், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள மாவட்ட பணிப்பாளர் திருமதி. ஏ. பாக்கியராஜா நிருவாக உத்தியோகத்தர் கே. தயாபரன், மாவட்டசெயலககணக்காளர் எம். வினோத் உட்பட மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பலரும் ஆர்வத்தோடு கலந்து கொண்டு சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.

Popular

More like this
Related

சலேவின் மருத்துவ அறிக்கை குறித்து நீதிமன்ற தீர்ப்பு

சுரேஷ் சலேவின் மருத்துவ அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்காதமை தொடர்பில் கொழும்பு தேசிய...

2027 ஆம் நிதியாண்டு ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு!

2027 ஆம் நிதியாண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடவும், அதனைத்...

சோதனையிலிருந்து சாதனைக்கு..; MDC-யின் சாதனைப் பயணம்1

-எழுதியவர். ஆர்ஸ் ஷித்தீக் கல்வி, மனஉறுதி மற்றும் சமூக முன்னேற்றத்தின் இரண்டு ஆண்டுகள்...

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி: கடுமையாக்கப்படும் கட்டுப்பாடுகள்; முடங்கியது மாட்டு இறைச்சி வணிகம்.

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில், டாங்ரா (Tangra) பகுதியில்...