சர்வதேச பாவனையாளர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு மன்னாரில் விசேட விழிப்புணர்வு நிகழ்வு

Date:

“zero Accidents” எனும் தொணிப்பொருளில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் ஏற்பாட்டில் வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் ஒழுங்கமைப்பில் விசேட நடமாடும் விழிப்புணர்வூட்டல் நிகழ்சித் திட்டம் மன்னார் நகர் மத்திய பகுதியில் இன்று திங்கட்கிழமை(15) காலை 9 மணியளவில் இடம் பெற்றது.
வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்கத்துடனும் போக்குவரத்து பயணங்களின் போது தரமான தலைக்கவசங்களை அணிவதன் முக்கியத்துவம் தொடர்பாக மேற்படி விழிப்புணர்வு நிகழ்சி திட்டத்தில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.
அதே நேரம்  இலங்கை  தரச் சான்று நிறுவனத்தின் அனுமதி அற்ற  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தலைக்வசங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாகவும் அது தொடர்பான விழிப்புணர்வும் அவ்வாறான தலைக்கவசங்களை பயன்படுத்துபவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் துண்டு பிரதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை ஊழியர்கள்   வீதி போக்குவரத்து பொலிஸார் மாவட்ட செயலக உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டு விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடதக்கது.
மன்னார்  நிருபர்

Popular

More like this
Related

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா உடல் நலக்குறைவால் காலமானார்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று...

சதொச நிறுவனத்தினால் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனத்தினால் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின்...