வடக்கில் இருவேறு கடற்பகுதியில் இன்று அதிகாலை 34 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இதன்படி மன்னார் கடற்பரப்பில் 20 மீனவர்கள் இன்று 25 வியாழக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து மேலும் 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்கள் பயணித்த ஒரு படகு பறிமுதல் செய்யப்பட்டது.