கொழும்பில் இன்று ஒரு மணிக்கு பிறகு மாற்று வீதிகளை பயன்படுத்த கோரிக்கை

Date:

இறையடி எய்திய இலங்கை அமரபுர மகா சங்கத்தின் மகாநாயக்க தேரர் கொட்டுகொட தம்மாவாச தேரரின் இறுதிக் கிரியைகள் இன்று (25) இடம்பெறவுள்ளது.

கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் இறுதிக் கிரியைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அன்னாரது பூதவுடல் பிற்பகல் 1 மணிக்கு கல்கிஸ்ஸை தர்மபால விஹாரையிலிருந்து வாகன தொடரணியில், கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு கொண்டு வரப்படவுள்ளது.

அன்னாரது இறுதிக் கிரியைகளை நடத்துவதற்கான கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து நடைமுறைகள் ஏற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வாகன தொடரணி பயணிக்கும் வீதி

கல்கிஸ்ஸை தர்மபால விஹாரையிலிருந்து ஸ்ரீ தர்மபால மாவத்தை ஊடாக காலி வீதிக்கு வாகன தொடரணி பிரவேசிக்கவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, காலி வீதியூடாக இடது பக்கம் திரும்பி, காலி வீதியூடாக தெஹிவளை, வெள்ளவத்தை, பம்பலபிட்டி, வஜிர வீதியிலுள்ள சந்தியின் ஊடாக வலது பக்கம் திரும்பி, எவ்லோக் வீதியில் இடது பக்கத்தின் ஊடாக தும்முள்ள சந்தி, தெஸ்டன் வீதி, கேம்பிரிஜ் பிரதேசம், தேசிய அருங்காட்சியகம் ஊடாக சுதந்திர சதுக்கத்தை நோக்கி பயணிக்கின்றது.

இந்த வாகன தொடரணி கல்கிஸ்ஸை முதல் சுதந்திர சதுக்கத்தை நோக்கி வருகைத் தருகின்றமையினால், பிற்பகல் 1 மணிக்கு பின்னர் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Popular

More like this
Related

ராஷித் அல்-கன்னூசியின் உடல்நிலை குறித்து சர்வதேச முஸ்லிம் உலமாக்கள் ஒன்றியம் கவலை: துனிசிய அரசிற்கு கோரிக்கை!

துனிசியாவின் மூத்த அரசியல் தலைவரும், பிரபல இஸ்லாமிய அறிஞருமான ஷேக் ராஷித்...

முதலீட்டாளர் நம்பிக்கையில் இலங்கை முன்னேற்றம்

முதலீட்டாளர் உறவுகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை தொடர்பில் வேகமாக முன்னேறி வரும்...

சுரேஷ் சலேயின் ரிட் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச்...

இன்று முதல் தென்மேற்குப் பகுதியில் மழை அதிகரிக்கும்!

இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சி...