சுயெஸ் கால்வாய் வழமைக்கு திரும்பியது | 320 கப்பல்களின் பயணம் ஆரம்பம்

Date:

ஒரு வார காலத்திற்கு பின்னர் சுயெஸ் கால்வாயின் கப்பல் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளன.

அதிக கொள்கலன்களுடன் பயணித்த எவர்கிவன் கப்பல் கடந்த செவ்வாய்க்கிழமை சுயெஸ் கால்வாயில் பயணித்த போது தரைதட்டியிருந்தது. அங்கு வீசிய புயல் காரணமாக குறித்த கப்பலின் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டிருந்தது.

இதனால் சுயேஸ் கால்வாய் ஊடான கப்பல் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது.பல நாடுகளுக்கு சொந்தமான 320 கப்பல்கள் தமது போக்குவரத்து நடவடிக்கையினை முன்னெடுக்க முடியாமல் அங்கு நங்கூரமிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து கப்பல் போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மீட்பு பணியாளர்கள் முன்னெடுத்திருந்த நிலையில், நேற்றைய தினம் அது விரிவுப்படுத்தப்பட்டிருந்தது.

இதற்கமைய, சுயெஸ் கால்வாயில் தரைதட்டியிருந்த கப்பல் முழுமையாக மீட்கப்பட்டு, அங்கு கப்பல் போக்குவரத்து வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...