நடராஜன் பயிற்சியாளருக்குச் செய்த நெகிழ்ச்சியான சம்பவம்

Date:

ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் பந்து வீச்சாளராக இடம்பிடித்து, அதன்பிறகு அணியில் இணைந்த நடராஜன், சிறப்பாகப் பந்துவீசி அசத்தினார்.

குறிப்பாக, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்ற இந்திய அணியில் மூத்த பௌலர்கள் பலர் காயம் காரணமாக அவதிப்பட்ட சமயத்தில் இளம் வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷார்துல் தாகுர், நவ்தீப் சைனி போன்றவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. இளம் பந்துவீச்சாளர்கள் இணைந்திருப்பதால், ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் எனக் கூறப்பட்டது.

ஆனால், நடராஜன் போன்றவர்கள் அதிரடியாகப் பந்துவீசி ஆஸி பேட்ஸ்மேன்களை திக்குமுக்காட வைத்து இறுதியில் இந்திய அணிக்கு வரலாற்று வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்கள். இதனால், இவர்களுக்கு உலகம் முழுவதும் பாராட்டு குவிந்தது.

இதனையடுத்து, கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்ட முன்னணி தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா, ஆஸி சுற்றுப் பயணத்தில் கலக்கிய நடராஜன் உட்பட 6 இளம் வீரர்களுக்கு கார் பரிசாக வழங்குவதாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது நடராஜனுக்கு மஹிந்திராவின் புதிய தார் எஸ்.யு.வி கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

இது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தனக்குப் பரிசாகக் கொடுக்கப்பட்ட காரை தனது பயிற்சியாளர் ஜெயபிரகாஷிற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார் நடராஜன். இதுகுறித்து ஜெயபிரகாஷ் தனது முகநூல் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் நடராஜனை பாராட்டி, மீண்டும் மக்கள் மனதை வென்றுவிட்டார் நடராஜன் என புகழாரம் சூட்டி வருகிறார்கள்

Popular

More like this
Related

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது!

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது...

‘வளர்ந்து வரும் சிறந்த கல்வி நிறுவனம்’ Amazon collegeக்கு மற்றுமொரு விருது.

உயர் கல்வித் துறையில் சுமார் 16 வருடங்களை நிறைவு செய்து வெற்றி...