புத்தாண்டு பண்டிகை தினங்களில் புகையிரத சேவைகள் சில ரத்து

Date:

எதிர்வரும் புத்தாண்டு பண்டிகை காலத்தில் அலுவலக புகையிரதங்கள் உட்பட கிட்டத்தட்ட 30 புகையிரத பயணங்களை ரத்து செய்ய ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, நாளை (13) மற்றும் நாளை மறுநாள் (14) இரண்டு நாட்கள் மாத்திரம் புகையிரத பயணங்கள் ரத்து செய்யப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், புத்தாண்டை முன்னிட்டு கிராமப்புறங்களுக்கு பயணிப்பவர்களுக்கும், மீண்டும் கொழும்பு திரும்புவோருக்கும் வழக்கம் போல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் கிராமப்புறங்களுக்குச் செல்லும் மக்களுக்கு புத்தாண்டு காலத்தில் சிறப்பு பேருந்து சேவை இயக்கப்படும் என்று போக்குவரத்துத் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...