வனப்பகுதியை பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி சற்று முன் வெளியிடப்பட்டுள்ளது!

Date:

ஹம்பாந்தோட்டை காட்டு யானை மேலாண்மை பாதுகாப்பு வனப்பகுதியை பிரகடனப்படுத்தும் வகையில் முன்மொழியப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியுறவு அமைச்சர் விமலவீர திஸாநாயக்காவின் கைச்சாத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

23,746 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பகுதி காட்டு யானை மேலாண்மை வனப்பகுதியாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் , குறித்த நிலப்பகுதியில் விமான நிலையமாக பெயரிடப்பட்டிருந்த 860 ஹெக்டேர் நிலப்பகுதி நீக்கப்பட்டுள்ளது.

காட்டு யானை மேலாண்மை பாதுகாப்பு வனப்பகுதி ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு உரிய பிரதேசங்களான, ஹம்பாந்தோட்டை, சூரியவெவ, லுனுகம்வெஹெர, மற்றும் தனமல்வில ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் குறித்த காட்டு யானை மேலாண்மை பாதுகாப்பு வனப்பகுதி அமைந்துள்ளதாக குறித்த வர்த்தமானி தெரிவிக்கின்றது.

இக் காட்டு யானை வனப்பகுதியை வர்த்தமானியில் பிரகடனப்படுத்துமாறு சூரியவெவ பகுதியின் விவசாயிகள் 86 நாட்கள் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஆட்பதிவு திணைக்கள அலுவலகங்கள் நாளை மூடல்

ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் வழங்கப்படும் ஒரு...

புதிய திட்டங்களுடன் மக்கள் பணியை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்போம்- ஜனாதிபதி செயலாளர்

புதிய கருத்துக்கள் மற்றும் திட்டங்களுடன் ஜனாதிபதியின் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை...

முன்னாள் எம்.பி. சந்தன கத்ரியாராச்சி கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி கொழும்பு குற்றப் பிரிவினரால் (CCD)...