கோட்டாபய ஆட்சியில் அச்சுறுத்தல் இடம்பெறுவது முதல் தடவையல்ல! | ஜே.வி.பி சீற்றம்!

Date:

கோட்டாபய ராஜபக்க்ஷ ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் விஜயதாஸ ராஜபக்க்ஷ மாத்திரம் அச்சுறுத்தப்படவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரையே ஜனாதிபதி அச்சுறுத்தும் போது சாதாரண பொதுமக்களின் நிலை என்ன என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

“கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்து தொடர்பாக தனது கருத்தை தெரிவிக்க ஜனாதிபதிக்கு உரிமை உண்டு. ஆனால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சாதாரண மக்களின் கருத்திற்கு பதிலளிக்க பல்வேறு வழிகள் உண்டு.எனவே மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்களால் நாட்டை ஆட்சி செய்ய ஜனாதிபதியும் அரசாங்கமும் மேற்கொண்ட முயற்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.நாடு குறித்து முடிவுகளை எடுக்கும்போது மக்களின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் எனவே தான் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையால் அங்கீகரிக்க வேண்டும் என கோரி உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

 

ஜனாதிபதி ஊடக பிரிவு அல்லது அரசாங்க தகவல் திணைக்களம் ஊடாக அந்த அறிக்கைக்கு பதிலளித்திருக்க முடியும். மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்களால் நாட்டை ஆட்சி செய்ய ஜனாதிபதியும் அரசாங்கமும் மேற்கொண்ட முயற்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

நீண்ட விடுமுறை காலத்தில் நாடாளுமன்றில் வரைபை சமர்ப்பித்து குறித்த சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்திற்குச் செல்வதற்கான உரிமையை கூட அரசாங்கம் பறித்திருக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Popular

More like this
Related

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...

இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை : வெளிவிவகார அமைச்சு தகவல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து இலங்கை இராஜதந்திர தூதரகங்களுடனும் நெருங்கிய...

சவூதி, பஹ்ரைன், கத்தார், UAE மீதும் ஈரான் தாக்குதல்.. அமெரிக்காவால் வெடிக்கும் 3ம் உலகப்போர்?

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து ஆக்ரோஷமாக தாக்கி வருகின்றன. இதையடுத்து...

மத்தியக் கிழக்கில் போர் பதற்றம்: ஸ்ரீலங்கன் விமான சேவையில் தாமதம்

இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள்...