எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 11பயணிகள் உயிரிழந்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். கெய்ரோவில் இருந்து Nile Delta நகருக்கு சென்று கொண்டிருந்த போது, Qalioubia மாகாணத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு 50ஆம்புலன்சுகள் காயம் அடைந்த பயணிகளை மருத்துவமனைகளுக்கு ஏற்றிச் சென்றன.
விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக எகிப்தின் ரயில்வேத் துறை தெரிவித்துள்ளது.