நாட்டின் பிரதான நகரங்களை உள்ளடக்கிய 25 மெகா அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் முடிவு

Date:

நாட்டின் பிரதான நகரங்களான கொழும்பு கண்டி காலி திருகோணமலை குருணாகலை மற்றும் இரத்தினபுரி ஆகியவற்றை உள்ளடக்கிய 25 மெகா அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதற்கென ஏக்கர் கணக்கில் தனியார் காணிகள் சுவீகரிக்கப்பட்ட உள்ளன. இந்த காணி சுவீகரிப்பு மூலம் பாதிக்கப்பட உள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு உரிய நாட்டை வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான சட்டமூலங்கள் ஏற்கனவே கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தேவையான சட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அபிவிருத்தித் திட்டங்களில்

மெட்ரோ கொழும்பு நகர அபிவிருத்தி திட்டம் குருநாகலில் இருந்து ஹபரணை வழியாக தம்புள்ளை வரைக்குமான ரயில்பாதை திட்டம் என்பன பிரதான இடம் பிடிக்க உள்ளன. இது தவிர
கண்டி, காலி ஆகிய நகரங்களில் உலக வங்கியின் நிதி உதவியோடு மூலோபாய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அனுராதபுரம் நகரம் பிரான்ஸ் அபிவிருத்தி நிதியத்தின் உதவியோடு புதுப்பொலிவு பெற உள்ளது. திருகோணமலை தம்புள்ளை குருணாகல் இரத்தினபுரி ஆகிய நகரங்கள் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியோடு நவீன அபிவிருத்திகளை காண உள்ளன என்று தெரியவந்துள்ளது .

Popular

More like this
Related

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...