முல்லைத்தீவு பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.19வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
குறித்த விபத்தில் மேலும் 20வயதான இளைஞர் ஒருவரும் காயமடைந்துள்ளதுடன் அவர்,சிகிச்சைக்காக முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.