ஹொரவ்பொத்தானயில் கடந்த 3 நாட்களில் 17 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

Date:

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 17  தொற்றாளர்கள் கடந்த 3 நாட்களில் ஹொரவ்பொத்தான பிரதேசத்தில் இனங் காணப்பட்டுள்ளதாக  சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஹொரவ்பொத்தான சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இன்று (26) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மூன்று பாடசாலை மாணவர்களும், மூன்று சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும், ஆசிரியர் ஒருவரும் அடங்குவதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஹொரவ்பொத்தான பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நமடவெவ பகுதியில் 8 பேரும், வெலிமுவபொத்தான பகுதியைச் சேர்ந்த 6 பேர் மற்றும் ஒலுகஸ்கடவெல பகுதியைச் சேர்ந்த மூவரும் இவ்வாறு அடையாளம்  காணப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் பரங்கியாவாடிய வித்தியாலயத்தின் பதினோராம் வகுப்பு மற்றும் நமடவெவ வித்தியாலயத்தின் இரண்டாம் வகுப்பு போன்றவற்றை தற்காலிகமாக மூட சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை அடையாளம் காணப்பட்டவர்கள் அனுராதபுரத்திலுள்ள மெத்சிறி செவன சிகிச்சை நிலையம் மற்றும் நொச்சியாகம மருத்துவமனையின் உள்ள சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி உள்ளதாகவும் ஹொரவ்பொத்தான சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
முஹம்மட் ஹாசில்

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...