புனித மக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் “ராபிதாவின்” உலக முஸ்லிம் லீக் அனுசரணையுடன் புனித ரமழானில் நாடு முழுவதிலும் உலர் உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.அந்த வகையில் இன, மத பேதமின்றி மூவின மக்களுக்கும் இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கப்படுகின்றன.
வறுமையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், கணவனை இழந்த பெண் குடும்ப தலைவிகளுக்கும் இவை வழங்கி வைக்கப்பட்டது.
மாளிகாவத்தை, வத்தளை,மாபோல, குருநாகல் போன்ற பிரதேசங்களில் இந்த பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.அத்தோடு தலா ஒரு குடும்பத்திற்கு ஆறாயிரம் ரூபா பெறுமதிமிக்க பொருட்கள் வழங்கி வருவதாகவும் இதுவரை 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இந்த பொதிகள் வழங்கப்பட்டதாக ராபிதா அமைப்பின் சமூக சேவை பிரிவின் இலங்கைக்கான பிரதிநிதி தேசபந்து இம்ரான் ஜமால்டீன் தெரிவித்தார்.இந்த உதவி வழங்கும் நிகழ்வில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.