கொவிட் 19 ஐ கட்டுப்படுத்தும் ஜனாதிபதி செயலணி தமது தீர்மானத்தை அறிவிக்கும் வரையில் பாடசாலைகள் தொடர்ந்தும் நடாத்திச் செல்லப்படும் என கல்வி அமைச்சின் அறிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 11ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட முறைமைக்கமைவாக தொடர்ந்தும் அவை நடாத்திச் செல்லப்படுவதாகவும் , நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடாமல் ,அந்தந்த பகுதிகளின் நிலைமையினை கருத்திற்கொண்டு பாடசாலை சுகாதார மேம்பாட்டுக் குழுவுடன் கலந்துரையாடி அதிபர்களால் தீர்மானங்களை மேற்கொள்ள முடியும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.