புனித மக்காவில் தினமும் 10,000 இப்தார் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.இவை வெளிநாட்டு மாணவர்களுக்கும், சுகாதாரத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஏனையவர்களுக்கும் இந்த இப்தார் உணவு தினமும் விநியோகம் செய்யப்படுகின்றது.
இதற்காக வெப்பம் மூட்டிய அடுப்புக்கள் மற்றும் குளிரூட்டல் கொண்ட 47 வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
ரமழானின் முதல் 15 நாட்களாக மக்காவில் உள்ள இக்ரம் உணவு பாதுகாப்பு அமைப்பு 115,000க்கும் மேற்பட்ட இப்தார் உணவுகளை விநியோகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்த அமைப்பின் ஸ்தாபகர் அகமத் அல் மெட்ராபி ,பணியாளர்கள் , குடியிருப்பாளர்கள் மக்கா நகரின் 25 சுற்றுப்புறங்களில் உள்ள ஒவ்வொரு நாளும் 10,000க்கும் மேற்பட்ட சூடான உணவை விநியோகம் செய்கின்றனர்.