மேல் மாகாணத்தில் இன்று (29) பிற்பகல் 12மணி முதல் காவல் துறை, சுகாதார சேவைகள் மற்றும் முப்படையினர் இணைந்து விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மேல் மாகாணத்திலிருந்து வெளிச்செல்வோருக்கும் உள்வருவோருக்கும் 12 இடங்களில் கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்