உலகுக்கே கொவிட் தடுப்பு மருந்து வழங்கி தனது சர்வதேச செல்வாக்கை தக்கவைக்க முயன்ற மோடி இன்று தனது சொந்த மக்களை சவக்கிடங்கில் வரிசையில் நிற்க வைப்பதில் சாதனை படைத்துள்ளார்

Date:

உலகம் முழுவதும் covid-19 தடுப்பூசியை தயாரிப்பதற்கு தடுமாறிக் கொண்டிருந்த வேளையில் இந்தியாவின் சரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம்
அந்தப் பொறுப்பை மிகத் துணிச்சலாக ஏற்று உலகின் மிகப் பெரிய தடுப்பூசி தயாரிப்பாளர் என்ற பெருமையை தனதாக்கிக் கொண்டது. அந்த அடிப்படையில் இந்தியா கடந்த ஜனவரியில் தன்னுடைய சொந்த நாட்டிற்கான தடுப்பூசி வழங்கும் திட்டத்தையும் தொடங்கியது. இதற்கிடையில் தடுப்பூசி தயாரிக்கப்பட்ட காலம் முதல் இதுவரை சுமார் 66 மில்லியன் அதாவது 6 கோடி 60 லட்சம் சொட்டு மருந்துகளை இந்தியா உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து இருக்கின்றது.

80 பதுக்கும் அதிகமான நாடுகளுக்கு இந்தியா கொவிட் சொட்டு மருந்தை அனுப்பி வைத்துள்ளது. ஆனால் இன்று அது தனது சொந்த மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு வழியின்றி தத்தளிக்கின்றன. அரச இயந்திரம் மௌனிக்கும் அளவுக்கு தடுமாற தொடங்கியிருக்கின்ற ஒரு பரிதாப நிலையை தான் இந்தியாவில் நாம் தற்போது அவதானிக்க முடிகின்றது.

250 மில்லியன் மக்களுக்கு எதிர்வரும் ஜூலை மாதமளவில் தடுப்பூசியை வழங்கிவிட வேண்டும் என்பது இந்தியாவின் இலக்காக இருந்தது. இந்தியாவின் மொத்த சனத்தொகை ஒன்று தசம் நாலு பில்லியன் அதாவது சுமார் 104 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது .இதில்
124 மில்லியன் மக்களுக்கு இதுவரை முதலாவது சொட்டு வழங்கப்பட்டிருக்கின்றது. 26 மில்லியன் மக்களுக்கு மட்டும்தான் முழு அளவில் தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கின்றது. ஏனையவர்கள் இந்த தடுப்பூசியை ஒட்டுமொத்தமாக பெற்றுக் கொள்ளாத நிலை அல்லது முதலாவது சொட்டை மட்டும் பெற்றுக் கொண்ட நிலையில் இன்று கொரோணா இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடத் தொடங்கியிருக்கிறது. ஆஸ்பத்திரிகளில் vaccine out of stock என்ற பல கைகளை தொங்க விடும் அளவுக்கு நிலைமை மோசமாகி உள்ளது.


இந்திய மக்கள் கொரோனா தாக்கத்தால் கொத்துக் கொத்தாக செத்துக் கொண்டிருக்கின்றார்கள் இதற்கு காரணம் இந்திய அரசாங்கத்தின் தவறான திட்டமிடலா? என்ற கேள்வி இப்பொழுது பரவலாக சர்வதேச ஊடகங்களில் எழுப்பப்பட்டிருக்கிறது. இந்தியா தனக்கு உரிய காலத்தில் சொட்டு மருந்தை அனுப்பி வைத்ததே என்ற நன்றியைக் கூட வெளிப்படுத்தாமல் உலக நாடுகள் இப்பொழுது மோடி அரசை குற்றம் சாட்ட தொடங்கியிருக்கின்றன. மோடி உலகில் தான் ஒரு தலைசிறந்த செல்வாக்குமிக்க ஒரு தலைவனாகத் திகழ வேண்டும் என்பதற்காக மேற்கொண்ட தவறான திட்டமிடல் தான் இந்திய மக்களின் இன்றைய நிலைக்கு காரணம் என்று உலக அரங்கில் தலைப்புச் செய்திகள் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன .
சர்வதேச ஊடகங்களுக்கு தீனி போடும் வகையில் இந்தியாவின் கள நிலவரத்தில் கொஞ்சம் கூட முன்னேற்றம் தென்படவில்லை. கடந்த சுமார் பத்து தினங்களாக புதிய தொற்றாளர் எண்ணிக்கையிலும் மரண வீதத்திலும் இந்தியா உலக சாதனை படைத்து வருகின்றது. இது மிகவும் கவலைக்குரிய நிலை. நேற்று புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்தை தாண்டி உள்ளது. மரணங்கள் நான்காயிரத்தை எட்டி உள்ளன.

ஒரு மோசமான தொற்று பரவல் காலத்தில்
தமது சொந்த நாட்டின் சனத்தொகை, குடி பரம்பல் முறை, பழக்க வழக்கம் என்பன பற்றிய சரியான மதிப்பீடு ஒன்றை செய்ய இந்திய ஆட்சியாளர்கள் தவறி விட்டனர். தமது ஆஸ்பத்திரிகளின் கொள்ளளவு,ஆற்றல் கட்டமைப்பு என்பவற்றையும் அவர்கள் கவனிக்கத் தவறி உள்ளனர். இதனால் உலகின் இரட்சகர்களாக தம்மை காட்டிக் கொள்ள முனைந்தவர்கள் சர்வதேச ஊடகங்களால் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளனர். தமது சொந்த மக்களால் சபிக்கப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...