மதவாதிகளின் சவாலை வென்று முதலமைச்சரானா பெண்மணி மம்தா பெனர்ஜி! இஸ்லாமிய வரலாற்றில் முதுமாணி பட்டம் வென்றவர்.

Date:

இந்திய நாட்டின் மாநிலங்களில் மேற்கு வங்க மாநிலம் முக்கியமான ஒரு பிரதேசமாகும். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அதனது தலைவியான மம்தா பானர்ஜியும் முக்கியமான பல அரசியல் பாத்திரங்களை மேற்கொண்டுள்ளனர். அந்தவகையில் மம்தா பானர்ஜி இம்முறை தேர்தலில் பல்வேறு வகையான அரசியல் எதிர்ப்புக்களை சம்பாதித்து இருந்தார்

 

அவர் எதிர்கொண்ட மிக முக்கியமான அரசியல் குற்றச்சாட்டு அவர் ஒரு முஸ்லிம் ஆதரவாளர் என்பதாகும் .முஸ்லிம்களது சமய நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் அதேவேளை அவர் முஸ்லிம்களுக்கு அதிகளவான ஆதரவையும் அரசியல் உதவியை வழங்குகின்றார் என்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் ஆளும் பாஜக மற்றும் ஏனைய ய மாநில கட்சிகளால் முன்வைக்கப்பட்டன ஆனாலும் அவர் அதனை கவனத்தில் கொள்ளவில்லை. தலித். மற்றும் முஸ்லிம் சிறுபான்மை மக்கள் இடத்தில் அதிக அக்கறை கொண்ட பேனர்ஜி இம்முறை வெற்றி அடைந்திருப்பது பாராட்டத்தக்கது

 

அத்தோடு முழு இந்தியாவிலும் உள்ள ஒரேயொரு பெண் முதலமைச்சர் என்ற பெருமையையும் பெறுகின்றார்.

 

மம்தா பேனர்ஜி தனது ஆரம்ப பட்டப்படிப்பை வரலாற்று (History) துறையில் Jogamya Devi College ல் கொண்டிருப்பதோடு அவரது முதுமானி பட்டத்தை “இஸ்லாமிய வரலாறு” (Islamic History) தொடர்பான விடயத்தில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில்(University of Culcatta) பெற்றார்.

 

அதேவேளை அவரிடத்தில் கல்வி மற்றும் சட்டத் துறையிலும் முதுமாணிப் பட்டங்களை அவர் பெற்றிருப்பது என்பது மிக முக்கியமான ஓர் அரசியல் ஆளுமைக்கான கல்வித்தகமையாக கருதமுடியும். ஒரு பெண் பல தடைகளையும் தாண்டி இந்த உயர்ந்த நிலையை அடைவது என்பது மிகவும் பாராட்டுக்குரியது..

 

எதிர்கால இந்தியாவின் பிரதமராக மிளிர

  வாழ்த்துக்கள் பேனர்ஜி

 

முபிஸால் அபூபக்கர்.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...