கொரோனா தொற்று எப்படி பரவுகிறது என்பது குறித்து புதிய தகவல்கள் | உலக சுகாதார அமைப்பு வெளியீடு

Date:

கொரோனா தொற்று எப்படி பரவுகிறது என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு சில வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது. காற்றில் அது பரவுவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையிலான மருத்துவம் நோயாளியின் உடலில் பரவிய கொரோனாவை குணப்படுத்தவில்லை. மாறாக அதன் அறிகுறிகளை வைத்து அதனைக் கட்டுப்படுத்தவே முயற்சிக்கப்பட்டு வருகிறது. இன்று வரை கொரோனா கண்ணுக்குத் தெரியாத எதிரியாகவே கருதப்படுகிறது.

முதல் அலையை விட இதன் இரண்டாம் அலை மேலும் ஆபத்தானதாகவும் கருதப்படுகிறது. ஒரு நோயாளிக்கு தான் எப்படி வைரசை பரப்புகிறோம் என்று தெரிவதில்லை.

கடந்த 2020 ம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட வழிகாட்டல்களில் குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் தொற்று பரவுவதாகவும் இருமல் மற்றும் தும்மலின் போது தெறித்து விழும் நீர்த்துளிகளால் பரவுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அது இன்றளவிலும் நீடிக்கிறது.

இந்நிலையில் தற்போது உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டலின் படி காற்றிலும் கொரோனா தொற்று பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்பு புவியீர்ப்பு சக்தி காரணமாக காற்றில் நீண்ட தூரம் பரவாமல் வைரஸ் பூமியில் உதிர்ந்துவிடுவதாக கருதப்பட்டது. ஆனால் இப்போது வைரஸ் நீண்ட தூரம் காற்றில் பரவுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...