மகாவலி அதிகார சபையின் நில சவீகரிப்புத் திட்டம் நிறுத்தப்படும் – சமல் உறுதி!

Date:

முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகார சபையால் திட்டமிடப்பட்ட நில சுவீகரிப்பு நிறுத்தப்படும் என்று துறைசார் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் நேற்று (05) உறுதியளித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனின் ஏற்பாட்டில் கடந்த மாதம் இடம்பெற்ற சந்திப்பின் அடிப்படையில் நேற்று கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பான விசேட சந்திப்பு நடைபெற்றது.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சர்கள், செயலாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கு நேரில் சென்று பார்வையிட்டு கருத்தறிந்து இறுதி முடிவு எட்டப்படும் என்று தங்களால் ஏற்கனவே உறுதியளிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த உத்தரவாதம் மீறப்பட்டு மகாவலி அதிகார சபை செயற்பட முனைகின்றது என தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

இதைச் செவிமடுத்த துறைசார் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச, குறித்த பகுதிக்கு எம்மால் நேரில் பயணித்து அது தொடர்பான இறுதி முடிவு எட்டப்படும் வரையில் மகாவலி அதிகார சபையின் செயற்பாட்டை நிறுத்துமாறு செயலாளர் ஊடாகக் கடிதம் அனுப்பப்படும் என்று உத்தரவாதம் வழங்கினார்.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்பவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!

சர்ச்சைக்குரிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் (Airbus) விமானக் கொள்முதல் தொடர்பான பணமோசடி...

மௌலவி என்பதற்காக மட்டும் ஒருவரை பின்தொடர்வது ஆபத்தானது; ஈஸ்டர் ஞாயிறு தீர்ப்பு தரும் பாடங்களில் ஒன்று.

2019 Easter Attack தொடர்பான வழக்கில் நேற்று குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டவர்களில் முக்கியமான...

முன்னாள் பிரதமர் நஜ்புத்தீன் எர்பகான் நினைவாக சிறப்பு வெள்ளி நாணயம்: துருக்கி நிதி அமைச்சகம் வெளியீடு!

துருக்கியின் முன்னாள் பிரதமரும், நாட்டின் மிக முக்கியமான அரசியல் தலைவர்களுள் ஒருவருமான...

3 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தார் ஜனாதிபதி!

மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார். அதன்படி,...