தனிமைப்படுத்தல் தொடர்பான புதிய அறிவிப்பு!

Date:

நாட்டில் மேலும் சில பிரதேசங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதனடிப்படையில்,

கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹல்புத்த, கெஸ்பேவ கிழக்கு, மாகந்தர மேற்கு, பெல்ஹேன மற்றும் நிவுன்கம கிராம சேவகர் பிரிவுகள்.

களுத்துறை மாவட்டத்தின் அகலவத்த பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிம்புர கிராம சேவகர் பிரிவு மற்றும் மதுகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட யட்டியான மேற்கு கிராம சேவகர் பிரிவு.

கம்பஹா மாவட்டத்தின் கடவத்த பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எல்தெனிய கிழக்கு, சூரியபாலுவ மேற்கு, சூரியபாலுவ வடக்கு, பஹல கரகஹமுன வடக்கு மற்றும் இஹல கரகஹமுன வடக்கு கிராம சேவகர் பிரிவுகள்.

மேற்குறிப்பிடப்பட்ட பிரதேங்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதேவேளை களுத்துறை மாவட்டத்தின் பதுரலிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இங்குருதலுவ கிராம சேவகர் பிரிவு மற்றும் மீஹகஹதென்ன பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெலவத்த கிழக்கு, மிரிஸ்வத்த மற்றும் பஹல ஹேவெச்ச கிராம சேவகர் பிரிவுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...