மன்னார் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் நூறு கோவிட் நோயாளர்களை அனுமதித்து சிகிச்சை வழங்க விசேட சிகிச்சை நிலையம் தயார்

Date:

மன்னார் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் நூறு கோவிட் நோயாளர்களை அனுமதித்து சிகிச்சை வழங்க விசேட சிகிச்சை நிலையத்தை இராணுவத்தினர் தயார் செய்து வருகின்றனர்.
 -மன்னார் தாரபுரம் பகுதியில் அமைந்துள்ள துருக்கி சிட்டி பாடசாலையினை மாவட்ட அரசாங்க அதிபர் பொறுப்பேற்றுள்ள நிலையில்,இராணுவத்தின் உதவியுடன்  கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
-குறித்த சிகிச்சை நிலையத்தில் ஒரே நேரத்தில் நூறு கொவிட் தொற்று நோயளர்களை அனுமதித்து சிகிச்சை வழங்கும் வகையில் தயார் செய்யப்பட்டு வருகின்றது.
-குறித்த சிகிச்சை நிலையத்தில் மன்னார் சுகாதார துறையினர் சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (7) மதியம் குறித்த சிகிச்சை நிலையத்தின் பணிகளை நேரடியாக சென்று பார்வையிட்டனர்.
-மன்னார் மாவட்டத்தில் கொவிட் தொற்றினால் பாதீக்கப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய மாவட்டங்களில் உள்ள சிகிச்சை நிலையங்களில் அனுமதிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நிருபர்

Popular

More like this
Related

ஆட்பதிவு திணைக்கள அலுவலகங்கள் நாளை மூடல்

ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் வழங்கப்படும் ஒரு...

புதிய திட்டங்களுடன் மக்கள் பணியை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்போம்- ஜனாதிபதி செயலாளர்

புதிய கருத்துக்கள் மற்றும் திட்டங்களுடன் ஜனாதிபதியின் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை...

முன்னாள் எம்.பி. சந்தன கத்ரியாராச்சி கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி கொழும்பு குற்றப் பிரிவினரால் (CCD)...