காணாமல் போன நபர் 12 நாட்களின் பின்னர் சடலமாக மீட்பு!

Date:

மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தைச் சோ்ந்த ஆண் ஒருவர் வாழைச்சேனை பிரதேச காட்டுப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமாக இன்று (09) மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

செங்கலடியைச் சேர்ந்த 58 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த ஏப்ரல் 27 ம் திகதி வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியேறியுள்ளார்.

பின்னர் குறித்த நபர் வீடு திரும்பாத காரணத்தால் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று (09) வாழைச்சேனை முறுத்தானை வயலை அண்டிய காட்டுப் பகுதியில் சடலம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் இருப்பதாக அந்த பகுதியில் விவசாய நடவடிக்கைக்குச் சென்றவர்களால் வாழைச்சேனை பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு பொலிசார் சென்று விசாரணைகளை மேற்கொண்டதில், உயிரிழந்தவர் கடந்த 27 ம் திகதி காணாமல் போன செங்கலடியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சடலத்தை மீட்ட பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை மற்றும் ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...