நாளை முதல் அடையாள அட்டையின் கடைசி எண்ணியபடியே வெளியில் செல்லலாம்

Date:

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசெலா குணரத்ன புதிய சுகாதார வழிகாட்டுதல்களை இன்று முதல் மே 31 வரை அமல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதன்படி, நாளை முதல் ஒரு நாளில் ஒருவர் மட்டுமே வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்.  இது நபரின் தேசிய அடையாள அட்டை எண்ணின் கடைசி இலக்கத்தால் தீர்மானிக்கப்படுகிறது.

அதன்படி, 1, 3, 5, 7, 9 ஆகிய எண்களை அடையாள அட்டையின் இறுதி எண்ணாக கொண்டுள்ளவர்கள் ஒற்றை நாட்களிலும் 0, 2, 4, 6, 8 ஆகிய எண்களை அடையாள அடடையின் இறுதி எண்ணாக கொண்டுள்ளவர்கள் இரட்டை நாட்களிலும் அத்தியாவசியமல்லாத தேவைகளுக்காக வீட்டில் இருந்து வெளியேற முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில், மேலதிக அறிவிப்பு வரும் வரை திருமணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  இருப்பினும், 15 நெருங்கிய உறவினர்களின் பங்களிப்புடன் திருமண பதிவுகளை மட்டுமே செய்ய முடியும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...