கினிகத்தேனை பகுதியில் பெய்த பலத்த மழைக் காரணமாக பொல்பிட்டிய மாதெனியாவத்த பகுதியிலுள்ள வீடொன்றின் மீது இன்று அதிகாலை மண் மேடு சரிந்து விழுந்துள்ளது.
இதனால் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தாய் மற்றும் அவரது மகள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் நாப்பாவல, தல்தூவ, தெஹியோவிட்ட உள்ளிட்ட கிராமங்களும் நீரில் மூழ்கின அத்துடன் களனி நதி பெருக்கெடுப்பு காரணமாக சீதாவக, தல்தூவ, மாகம்மன, தெஹியோவிட்ட மற்றும் நாப்பாவல ஆகிய கிராமங்களில் தாழ்வான பகுதிகள் தற்போது நீரில் மூழ்கியுள்ளதாக குறித்த பிரதேசத்தின் ஊடகவியலாளர் ஷபீர் முஹம்மத் தெரிவித்திருந்தார்.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக அத்தனகல்ல ஓயாவை அண்டிய திஹாரிய – தூல்மலை பிரதேசத்தின் சில பகுதிகளும் இன்று (14) வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு
மள்வானையில் களனி கங்கையினை அண்மித்த தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.