இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இன்று பகலிரவு ஆட்டமாக இடம்பெறவுள்ள இந்தப் போட்டி, மதியம் 12.30க்கு டாக்காவில் ஆரம்பமாகவுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரை, 2 க்கு 0 என்ற அடிப்படையில் பங்களாதேஷ் அணி ஏற்கனவே கைப்பற்றியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.