UPDATE-
ஜூன் மாதம் 2 ஆம் திகதி முதல் 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமுர்த்தி பெறுநர்கள், தொழில் இழந்தோர் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு இவ்வாறு நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
—————————————————————————————————————————————–
மீண்டும் ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்கு தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக நேற்று கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மேலும், நிரந்தர வருமானம் இன்றி நாளாந்த வருமானத்தை பெறும் மக்களுக்கு இந்த கொடுப்பனவு மீண்டும் வழங்கப்படவுள்ளது.
கொவிட் பரவலின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு நாடு முழுவதும் பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமையினால் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
இந்த கொடுப்பனவு எவ்வளவு மக்களுக்கு வழங்கப்படும் என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. அமைச்சரவை மற்றும் உரிய பிரிவுகள் ஒன்றுக்கூடி இது தொடர்பில் தீர்மானங்கள் மேற்கொள்ளும்.
இந்த கொடுப்பனவினை எதிர்வரும் வாரத்திற்குள் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.