தனியார் வைத்தியசாலைகளில் கொவிட் கால பாரிய மாபியா தொடர்பாக முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு!

Date:

கொரோனா பரவலை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தனியார் வைத்தியசாலைகளில் பாரிய மாபியா இடம்பெற்று வருகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் உடனடியாக தலையிட்டு பாதிக்கப்பட்ட தொற்றாளர்களுக்கான சிகிச்சைக்கு குறைந்தபட்ச கட்டணங்களை அறவிடும் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜனாதிபதியிடம் முறைப்பாட்டு கடிதம் ஒன்றையும் ஒப்படைக்க தயாராகி வருவதாக அவர் கூறினார். நாடளாவிய ரீதியில் தற்போது கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

 

இவர்கள் அனைவரையும் அரச மருத்துவமனைகளில் அனுமதிக்க முடியாத நெருக்கடி நிலையொன்று காணப்படுகின்றது. இந்த சூழ்நிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்தும் தனியார் வைத்தியசாலைகள் தமது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் கொவிட் தொற்றாளர்களிடம் சிகிச்சை கட்டணமாக இலட்சக்கணக்கான ரூபாவை அறவிடும் நிலையொன்று காணப்படுகின்றது.

 

நானும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன். அப்போது எனக்கும் இவ்வாறான நிலையொன்று ஏற்பட்டது.

 

அதனாலேயே இதன் உண்மைத்தன்மை என்னவென்பதை என்னால் உணர முடிந்தது. சாதாரண மக்கள் அரச மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை காரணமாக தமது உயிரை காப்பாற்றிக்கொள்ள தனியார் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.

 

அவர்களிடம் லட்சக்கணக்கான பணத்தை கொள்ளையடித்தால் அவர்கள் நிலை என்னவாகும். எனவே கொரோனா வைரஸ் பரவலை வைத்துக்கொண்டு மிகப்பெரிய மாபியா இடம்பெற்று வருகின்றது. அரசாங்கம் இதனை கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

நாட்டில் சகலரும் கொரோனா வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் சகலருக்கும் ஒரே விதமான சிகிச்சைகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானம் எடுக்க வேண்டும்.

 

அதுமட்டுமல்ல இந்த ஊழல் மோசடிகள் குறித்து ஜனாதிபதிக்கு முறைப்பாட்டு கடிதம் ஒன்றினை ஒப்படைக்கவுள்ளேன். ஜனதிபதியேனும் தலையிட்டு செயலணிக் கூட்டங்களின் ஊடாக உரிய தரப்பை வலியுறுத்தி மக்களின் பணம் கொள்ளையடிக்கப்படுவதை தடுக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...