சுற்றுலா பயணிகளை அழைத்து வருவதை நிறுத்துங்கள்-சிரேஷ்ட பேராசிரியர் வேண்டுகோள்!

Date:

வேகமாக பரவும் கொவிட் வைரஸ் இனங்காணப்பட்ட நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து வருவதை நிறுத்துமாறு சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜுன த சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று “BIG FOCUS” நிகழ்ச்சில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

14 நாட்களாக மூடப்பட்டிருந்த விமான நிலையங்கள் நேற்று (01) முதல் சுற்றுலா பயணிகளுக்காக திறந்து விடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தென் ஆபிரிக்காவில் மிக வேகமாக பரவக்கூடிய வைரஸ் வகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் தென் ஆபிரிக்காவில் இருந்து இலங்கை வருவதற்கு எந்த தடையும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலமையில் இந்த செயற்பாடு மிகவும் ஆபத்தானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...