இன்று இரத்தினபுரி – தும்பர -இஹலபொல பகுதியில் ஏற்றப்பட்ட மண் சரிவில் காணாமல் போன மூவரில் 16 வயதான சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், அச்சிறுமியின் தாய் காயங்களுடன் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மற்றைய நபர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.