தென்மேற்கு பருவப்பெயர்ச்சி வலுவடைவதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை நாளையுடன் குறைவடையக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இன்று இரவு வேளைகளில் நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்யக் கூடும் என அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.