சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு சவால்களுக்கு மத்தியிலேயே, இலங்கை இம்முறை உலக சுற்றுச்சூழல் தினத்தை எதிர்கொள்கிறது.
இந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, அனைத்து வீடுகளையும், வீட்டுத் தோட்டங்களையும், நுளம்புகளற்ற இடமாக வைத்திருக்க இன்றும், நாளையும், நடவடிக்கை எடுக்குமாறு சுற்றாடல் அமைச்சு பொதுமக்களைக் கோரியுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு 48 மணித்தியாலம் என்ற தொனிப்பொருளில், இந்த வேலைத்திட்டம் நடைமுறையாகிறது.
கொரோனா பரவல் நிலைக்கு மத்தியில் தற்போதைய காலநிலையுடன், எதிர்காலத்தில் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரிக்கும் நிலைமை உள்ளது.
எனவே இதனை கருத்திற் கொண்டு பொதுமக்கள் தத்தமது சுற்றுச்சூழலை தூய்மையாக பேணுமாறு சுற்றாடல் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.