நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

Date:

கடும் மழையுடனான வானிலை இன்றுடன் குறைவடைகின்ற போதிலும் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மழை வீழ்ச்சி குறைவடைந்துள்ளதால் நாட்டில் உள்ள பெரும்பாலான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் சற்று குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகளில் 4 வான் கதவுகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன.

எனவே, தெதுருஓயாவிற்கு அருகில் வாழும் மக்கள் அது குறித்து அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது நிலவும் வெள்ளப்பெருக்கு நிலை படிப்படியாகக் குறைவடையக்கூடும் எனவும் நீர்ப்பாசன திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...

உண்மை முழுமையாக வெளிப்படும் வரை நீதிக்கான எமது போராட்டம் ஓயாது: கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள்,...

‘அமைதி பாதயாத்திரைக்கு ஆதரவளிப்பது கௌரவம்’: ஜனாதிபதி

இன்று (21) ஆரம்பமாகும் ‘அமைதி பாதயாத்திரைக்கு ‘ தனது முழுமையான ஆதரவை...

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 7ஆண்டுகள் நிறைவு

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும்...